விஜய் நடிக்கவிருந்த படத்தில் ராகவா லாரன்ஸ்?

  • IndiaGlitz, [Monday,January 04 2016]

இளையதளபதி விஜய் தனது 59வது படமான 'தெறி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தை இயக்க கிட்டத்தட்ட 10 முன்னணி இயக்குனர்கள் முன்வந்த நிலையில் அந்த வாய்ப்பு 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர்' பரதனுக்கு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் விஜய்யை இயக்கவிருந்த பட்டியலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இருந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. பீட்சா, ஜிகர்தண்டா படங்களை அடுத்து தற்போது 'இறைவி' என்ற படத்தை முடித்துள்ள கார்த்திக் சுப்புராஜ், விஜய்க்காக ஒரு அதிரடி ஆக்சன் கதையை தயார் செய்து வைத்திருந்தார் என்றும் ஆனால் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அதே கதையை ராகவா லாரன்ஸுடன் அவர் இணையும் படத்தில் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு தயார் செய்த கதையை கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸிடம் கூறியதாகவும், அவர் இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. ராகவா லாரன்ஸ் தற்போது 'பைரவா' மற்றும் 'நாகா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சிங்கம் 3' படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு தேதி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம்', சிங்கம் 2' ஆகிய வெற்றி படங்களை அடுத்து 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இவ்வாரம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

இணையத்தை கலக்கும் பார்த்திபனின் பீப் பாடல்

கடந்த சில நாட்களாக சிம்புவின் பீப் பாடல் தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது புதியதாக...

ஜனவரி 25-ல் வெளியாகிறது விஜய் ரசிகரின் படம்

அஜித், விஜய் ரசிகர் கேரக்டர்களில் பல கோலிவுட் நடிகர்கள் தங்கள் படங்களில் நடித்திருக்கும் நிலையில் மலையாள நடிகர் ஒருவர் விஜய்யின் ரசிகராக நடித்து வருகிறார்...

அஜித், சிம்பு இயக்குனரின் இயக்கத்தில் ஆர்யா

ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க', 'யட்சன்', மற்றும் 'இஞ்சி இடுப்பழகி' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீசில் ஹிட்டாக தவறியது. புறம்போக்கு படத்திற்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்தது....

லிட்டில் ஏஞ்சல் அனோஷ்காவுக்கு இன்று 8வது பிறந்த நாள். ரசிகர்கள் வாழ்த்து

தல அஜித்-ஷாலினி நட்சத்திர தம்பதியினரின் மூத்த மகள் அனோஷ்கா இன்று தனது 8வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அஜித் ரசிகர்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமுக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...