close
Choose your channels

விஜய் நடிக்கவிருந்த படத்தில் ராகவா லாரன்ஸ்?

Monday, January 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் தனது 59வது படமான 'தெறி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தை இயக்க கிட்டத்தட்ட 10 முன்னணி இயக்குனர்கள் முன்வந்த நிலையில் அந்த வாய்ப்பு 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர்' பரதனுக்கு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் விஜய்யை இயக்கவிருந்த பட்டியலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இருந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. பீட்சா, ஜிகர்தண்டா படங்களை அடுத்து தற்போது 'இறைவி' என்ற படத்தை முடித்துள்ள கார்த்திக் சுப்புராஜ், விஜய்க்காக ஒரு அதிரடி ஆக்சன் கதையை தயார் செய்து வைத்திருந்தார் என்றும் ஆனால் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அதே கதையை ராகவா லாரன்ஸுடன் அவர் இணையும் படத்தில் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு தயார் செய்த கதையை கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸிடம் கூறியதாகவும், அவர் இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. ராகவா லாரன்ஸ் தற்போது 'பைரவா' மற்றும் 'நாகா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.