மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம்: பிரபல நடிகரின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

மதச்சார்பின்மை குறித்து பொது மேடையில் அரசியல்வாதிகள் பேசினாலும் உண்மையில் மத கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள் தான் இந்தியாவில் அதிகம் என்பது அனைவருடைய கருத்தாக இருக்கிறது

இந்த நிலையில் உண்மையான மதச் சார்பின்மையை நிரூபிக்கும் வகையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஒரு மிகப்பெரிய செயலை செய்ய உள்ளார்

இந்தியாவில் உள்ள மூன்று முக்கிய மதங்களான இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ ஆகிய மூன்று மதங்களுக்கான ஒரு ஆலயம் ஒரே இடத்தில் கட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளார். அவருடைய இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரே ஆலயத்தில் மூன்று மதங்களும் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருந்து அவரவர் தெய்வங்களை கும்பிட்டு உண்மையான மதச் சார்பின்மையை நிரூபிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படி ஒரு கோவில் உலகிற்கே வழிகாட்டியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அன்னைக்கு கோயில் எழுப்பி உள்ளார் என்பது தெரிந்ததே

More News

ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரே ஒரு நல்லது நடக்கும்: அமைச்சர் ஜெயகுமார்

வரும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம்

"பிரதமருக்கு மட்டும் குடியுரிமைச் சான்றிதழ் தேவையில்லை"..! RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்.

சுபங்கர் சர்கார் என்பவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சடலங்களைப் பதப்படுத்தும் “பார்மலின்” வேதிப்பொருள் மீன்களுக்கா??? பதற வைக்கும் அதன் விளைவுகள்

காசி மேடு மீன் சந்தையில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களின் தரம் குறைந்து காணப்படுவதாகத் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் எழுந்த

ஆணவக்கொலைகள் குறித்த திரைப்படத்திற்கு பா.ரஞ்சித் பாராட்டு!

சமீபத்தில் வெளியான ஆணவ கொலைகள் குறித்த திரைப்படம் 'கன்னிமாடம்'. நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் தற்போது ஓடி வருகிறது.

உயிர் வாழ பரிட்சை முக்கியமா? பிரபல இசையமைப்பாளரின் டுவீட்

பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர்.