பாஜக வேட்பாளராக களமிறங்கும் ராகவா லாரன்ஸ் பட நாயகி.. வெற்றி கிடைக்குமா?

  • IndiaGlitz, [Monday,March 25 2024]

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே நான்கு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் ராகவா லாரன்ஸ் பட நடிகைக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான ’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய வேடத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள கங்கனா ரனாவத் தற்போது ’எமர்ஜென்சி’ என்ற படத்தில் நடித்து இயக்கி உள்ளார் என்பதும், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் கதையம்சம் கொண்ட இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் கங்கனா ரனாவத் போட்டியிட போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மண்டி என்ற தொகுதி கங்கனா ரனாவத்தின் பிறந்த மண் என்பதும் அவர் பிறந்த இடம் என்பதால் அவர் எளிதில் வெற்றி பெறலாம் என்பதால் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சீட்டு வழங்கி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக நடிகை கங்கனா ரனாவத் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பாக ராமர் கோவில் திறப்பு விழாவின் போது அவர் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடஓட விட்ட ஹர்திக் பாண்ட்யா.. 'நீ இந்தியா டீமுக்கு வா பார்த்துக்கிறேன்'.. ரோஹித் சர்மாவின் மைண்ட் வாய்ஸ்

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியின் சீனியர் வீரரான ரோஹித்

பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் தோழா: ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டிட்யூட்.. ருத்ராஜின் பணிவு..

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரோகித் சர்மாவை அலைக்கழித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயலுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்

ரிபெல்' வெற்றியை அடுத்து 2 படங்களின் ரிலீஸ் தேதி .. ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த படங்கள்..!

ஜிவி பிரகாஷ் நடித்த ரிபெல்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சு வெங்கடேசன் எம்பியின் 'மக்கள் ஊழியன்' வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன்..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சு வெங்கடேசன் சமீபத்தில் அவரது கட்சியின் பிரச்சார பாடலை வெளியிட்டார் என்பதும் அந்த பாடல் மிகப்பெரிய அளவில்

நீச்சல் குளம், பீச்சில் 'கோட்' பட நாயகி.. தாய்லாந்து டூரின் தகதகக்கும் போட்டோஷூட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தில் நாயகி ஆக நடித்து வரும் நடிகை சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் நீச்சல் குளம், பீச் உட்பட பல பகுதிகளில் எடுத்த புகைப்படங்களை