இதுதான் எங்க தலைவர், குருவே சரணம்: ரஜினி குறித்து ராகவா லாரன்ஸ்

மும்பையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இனி பிழைக்க மாட்டோம் என்று நினைத்து அவர் ரஜினிக்கு பதிவு செய்த டுவிட்டில், ‘தலைவா எனது இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு மக்களின் தனிநபர் வருமானம் 25,000 ரூபாய் என்ற நிலையை உருவாக்கிக் கொடுங்கள். உன்னை அரியணையில் ஏற்ற விடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் தான் எனக்கு உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த டுவிட்டுக்கு பதிலளித்த ரஜினிகாந்த் ’உங்களுக்கு ஒன்றும் ஆகாது, தைரியமாக இருங்கள். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். நலமுடன் வீடு திரும்பியவுடன் எனது வீட்டிற்கு வாருங்கள்’ என்று ஆடியோ மூலம் கூறியிருந்தார்.

ரசிகருக்கு ஆறுதல் கூறும் வகையில் ரஜினிகாந்த் வெளியீட்டை இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்து ரஜினிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இதுதான் எங்கள் தலைவர். தலைவரின் ஆடியோவை கேட்கும்போதே பாசிட்டிவான எண்ணத்தையும் பாசத்தையும் ஊட்டுகிறது. இதைக் கேட்ட அந்த ரசிகர் அதனை எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். லவ் யூ தலைவா! குருவே சரணம்’ என்று பூரிப்போடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ராகவா லாரன்சின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

சீனாவில் பரவும் புதிய பாக்டீரியா நோய்!!! கொரோனா மாதிரி இதுவும் ஆபத்தானதா?

கடந்த சில தினங்களாக சீனாவில் ப்ரூசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா நோய் மனிதர்களுக்குப்

தனது ஸ்கூட்டரை நடமாடும் வகுப்பறையாக மாற்றிய ஆசிரியர்… குவியும் பாராட்டுகள்!!!

கொரோனா தாக்கத்தால் மாணவர்களின் கல்வி முறையே முற்றிலும் மாறியிருக்கிறது

150 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த காரில் ஓட்டுநர், சகபயணிகளும் மணிக்கணக்காக தூங்கிய அதிர்ச்சி சம்பவம்!!!

கனடாவின் அல்பர்டா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரைப் பார்த்து

மனைவியின் நிர்வாண படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த கணவன்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மனைவியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது பேடிஎம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி அதிரடியாக நீக்கப்பட்டதால் அதன் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.