நடிகர் ராகவா லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த நான்கு நாட்களாக மெரீனாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து பொருட்களுக்காக ரூ.1 கோடி கூட செலவு செய்ய தயார் என்று நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டக்களத்திற்கு நேரில் வந்து ஆதரவு கொடுத்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்த ராகவா லாரன்ஸ் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் போராட்டம் செய்யும் மாணவர்கள் உள்பட அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More News

இலவச செக்ஸ்ன்னா இதைவிட அதிகமா கூடுவாங்க- ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய ராதா ராஜன்

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையின்றி, எந்த ஒரு தனிப்பட்ட...

நான் பீட்டா உறுப்பினர் அல்ல. செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. எப்படியும் இந்த போராட்டத்தில் வென்றே தீருவது...

சென்னை மெரீனாவில் மாணவர்கள் மத்தியில் ஹீரோவான காவலர்

சென்னை மெரீனாவில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது., இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் எந்தவித வன்முறையும் இதுவரை நடைபெற்றது இல்லை...

ஐபிஎல் கிரிக்கெட் போல இனி ஜல்லிக்கட்டு லீக். நடிகர் வீரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன் நேற்று முன் தினம் இரவு முதல் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பலரசிகர்களும் நடிகர்களும் உட்கார்ந்து போராடி வருகின்றனர்...

நடிகர் சங்கத்தின் மெளன போராட்டத்தில் அஜித்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருபக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நான்கு நாட்களாக போராடி வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று ஒருநாள் மெளன போராட்டம் நடத்துவதாக அறிவித்தது...