close
Choose your channels

10 ரூபாய் நோட்டை கிழித்து … சினிமா வில்லனையே மிஞ்சும் லஞ்ச வழக்கு!!!

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

10 ரூபாய் நோட்டை கிழித்து … சினிமா வில்லனையே மிஞ்சும் லஞ்ச வழக்கு!!!

 

இந்திய ரயில்வே துறையில் நடைபெற்ற ஒரு லஞ்ச வழக்கு பழைய சினிமா படங்களில் வரும் வில்லனையே தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு நடைபெற்று இருக்கிறது. இந்த வழக்கில் ஒரு அதிகாரி 10 ரூபாய் நோட்டை கிழித்து அந்த எண்ணைக் கொண்டு வரும் நபரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கேட்டு லஞ்சத்தை வாங்கி இருக்கிறார். மேலும் இந்த லஞ்ச வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் மருமகனுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே துறையில் IRSSE அதிகாரியாக செயல்பட்டவர் மகேஷ்குமார். இவர் கடந்த 2013 மே 3 ஆம் தேதி ரயில்வே துறையின் வாரிய உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கு 50 லட்ச ரூபாயை லஞ்சம் வாங்கியதாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த லஞ்சத்தை அவர் வாங்கிய விதம்தான் அமலாக்கத்துறை அதிகாரிகளை கடும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ரயில்வே வாரிய உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கு லஞ்சம் வாங்கிய மகேஷ்குமார் ஒரு 10 ரூபாய் நோட்டை கிழித்து அதை ரகுவீர் புல்கா என்பவரின் கொடுத்து அனுப்பி இருக்கிறார். இந்த நபரை மகேஷ்குமாருக்கு கடந்த 10-15 வருடங்களாக தெரியும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கிழிந்த 10 ரூபாய் நோட்டை எடுத்துச் சென்ற அந்த நபர் ரகுவீர் புல்காவிடம் இருந்து லஞ்சப் பணத்தை பத்திரமாக வாங்கிக்கொண்டு மகேஷ்குமாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி அமலாக்கத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழைய சினிமாக்களிலும் வில்லன்கள் எதாவது கடத்தல் பொருளை பெறுவதற்கு கிழந்த ரூபாய் நோட்டுகளை அடையாளமாகப் பயன்படுத்துவர். அப்படித்தான் இந்த அதிகாரியும் பயன்படுத்தி இருக்கிறார். இந்தச் சம்பவம் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.