இணையத்தில் வைரலாகும் ரைசா வில்சனின் முத்த வீடியோ

  • IndiaGlitz, [Saturday,March 23 2019]

பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடித்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரைசா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பது போல் உள்ளது. மேலும் இந்த டுவீட்டில் ரைசா, 'Do NOT kiss me, I mean it ' என்றும் பதிவு செய்துள்ளார். ரைசா முத்தம் கொடுக்க கொடுக்க அந்த நாய்க்குட்டி திரும்பிக்கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

10 ஆண்டுகள் தொகுதிப்பக்கம் வராதவர்: அதிமுக எம்பியை அறிமுகம் செய்த பாமக நிர்வாகி

அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகளை பெற்று பாமக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவரை பாமக நிர்வாகி ஒருவர் பத்து ஆண்டுகளாக தொகுதிப்பக்கம் வராதவர்

ஐந்து நாட்களில் நயன்தாராவின் இரண்டு ரிலீஸ்: ரசிகர்கள் மகிழ்ச்சி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அரசியல்ல நாம தலையிடனும், இல்லாட்டி அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்: 'உறியடி 2' டீசர் விமர்சனம்

'உறியடி' படத்தில் நடித்து இயக்கிய விஜயகுமார், அதன் தொடர்ச்சியாக தற்போது 'உறியடி 2' படத்தை இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் வெளிநாடு செல்கிறாரா விஷால்?

சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே 'மதகஜ ராஜா', மற்றும் 'ஆம்பள' படங்களில் நடித்த விஷால், மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த விஜய்சேதுபதி படக்குழு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்குவது முடிவதும் மின்னல் வேகத்தில் நடக்கும் என்பது தெரிந்ததே! வருடக்கணக்கில் மெகா படங்களை எடுத்து கொண்டிருக்கும் படக்குழுவினர்