ரஜினியின் '2.0' படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஒரு ஆச்சரியமான தகவல்

  • IndiaGlitz, [Wednesday,September 12 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள '2.0' திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடி என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் அதிக பட்ஜெட் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.

ஆனால் இந்த படத்தின் பட்ஜெட், கிராபிக்ஸ் பணிகளால் இன்னும் உயர்ந்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவலை பட நிறுவனமே வெளீயிட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 75 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

இன்றைய டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பின்படி பார்த்தால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.545 கோடியாகும். ரூ.500 கோடியை தாண்டிய முதல் இந்திய திரைப்படம் இதுதான் என்பதும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் கிராபிக்ஸ் இந்த படத்தில் இருப்பதால் இந்த படம் உலக அளவில் பேசப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே உலகம் முழுவதும் சுமார் 3000 டெக்னீஷியன்கள் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமா வரலாற்றில் '2.0' திரைப்படம் அடுத்த பரிணாமமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

More News

அனிருத்தின் பட்டையை கிளப்பும் 'பேட்ட' தீம் மியூசிக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'பேட்ட' என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதும் அந்த டைட்டில் உலக அளவில் டிரெண்ட் ஆனது

விஜய்சேதுபதி-த்ரிஷாவின் '96' ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதை ஏற்கனவே பார்த்தோம்

'96' தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் தெரியுமா?

முதல்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படமான '96' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றது

ஜோதிகாவின் புதிய படத்தின் இயக்குனர் அறிவிப்பு

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் பெற்ற வெற்றியால் அதன்பின்னர் பாலாவின் 'நாச்சியார்' உள்பட ஒருசில திரைப்படங்களில் ஜோதிகா நடித்தார்

ஹீரோவாக நடிப்பது உண்மையா? யோகிபாபு விளக்கம்

நல்ல மார்க்கெட்டில் இருக்கும் காமெடி நடிகர்கள் திடீரென ஹீரோவாக ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் கூட ஒரு முன்னணி காமெடி நடிகர் ஹீரோ ஆசையினால் காணாமல் போனதை கோலிவுட் அறியும்