சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' ரன்னிங் டைம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,November 20 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன்களும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் 148 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட படமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழை பெற்றுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷு பாண்டே, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

கஜா புயலின்போது மூடப்பழக்கத்தால் பலியான சிறுமி

இயற்கை பேரழிவான கஜா புயலால் டெல்டா மாவட்டத்தில் பல உயிர்கள் பலியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் புயலால் மட்டுமின்றி மூடப்பழக்கத்தாலும் ஒரு பிஞ்சு உயிர் பலியாகி இருக்கும் செய்தி

இணையத்தில் வைரலாகும் ஓவியா-ஆரவ் பீச் செல்பி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஆரவ் மற்றும் ஓவியா காதலிப்பதாக ஒருபக்கம் வதந்தி பல மாதங்களாக இருந்து வரும் நிலையில்

விஷாலுடன் இணையும் ஏஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான சர்கார்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கஜா புயல் பாதித்த மக்களுக்கு சிவகார்த்திகேயனின் நிதியுதவி

இயற்கை பேரிடர் நிகழும்போதெல்லாம் அந்த பேரிடரால் துயரப்படும் மக்களின் துயர் துடைப்பதில் திரையுலகினர்களின் பங்கு மகத்தானது என்பதை நாம் அவ்வப்போது பார்த்து கொண்டு வருகிறோம்

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான '96', 'செக்க சிவந்த வானம்' , 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி