close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' ரன்னிங் டைம் குறித்த தகவல்

Tuesday, November 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன்களும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் 148 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட படமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழை பெற்றுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷு பாண்டே, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.