close
Choose your channels

ஐஸ்லாந்தில் 'புஷ்பா 2' பாடலுக்கு ஆட்டம் போட்ட கமல்-ரஜினி பட நடிகை.. வைரல் வீடியோ..!

Sunday, May 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை மீனா, ஐஸ்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் அங்கு அவர் ‘புஷ்பா 2’ படத்தின் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா அதன் பிறகு ’ஒரு புதிய காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்தவர் கமல்ஹாசன் உடன் ’அவ்வை சண்முகி’ ரஜினிகாந்த் உடன் ’எஜமான்’ ‘வீரா’ உள்பட சில பட்ங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி அஜித்துடன் ‘சிட்டிசன்’ உள்பட சில படங்களிலும் விஜய் நடித்த ’ஷாஜஹான்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது மீனாவுக்கு 47 வயதானாலும் அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக ’ரவுடி பேபி’ என்ற தமிழ் படத்திலும் ’ஆனந்தபுரம் டைரி’ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மீனா ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது ஐஸ்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மீனா, அங்கு இயற்கை எழில் கொஞ்சம் இடத்தில் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு செம நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இஸ்லாந்தில் அவரது மற்ற சில புகைப்படங்கள் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment