நாற்பதிலும் வெற்றி பெற ரஜினியை துணைக்கு அழைக்கும் கமல்!

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள கமல்ஹாசன், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற ரஜினி போன்ற நல்லவர் துணை தேவை என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், பெரிய கட்சிகள் கூட துணிந்து எடுக்காத தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில் கமலின் கட்சி ஒருவருடம் நிறைவடைந்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் ' கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...என்று கூறியுள்ளார்.

ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி கூறிய கமல், என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை  நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே என்று தெரிவித்துள்ளார்.

கமலின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ரஜினி வரும் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

'தல 59' படத்தில் இணைந்த 'இந்தியன் 2' நடிகர்!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தில் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்தில் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ஹீரோவாகும் சூர்யா-கார்த்தி பட நடிகையின் சகோதரர்!

சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே' மற்றும் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவ்' ஆகிய படங்கள் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரித்திசிங்

2019 ஆஸ்கர் விருதுகள்: விருதுகளை குவிக்க தொடங்கிய 'பிளாக் பாந்தர்'

2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு சற்றுமுன் தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற 'பிளாக் பாந்தர்' திரைப்படம் விருதுகளை குவிக்க தொடங்கிவிட்டது.

விபத்தில் சிக்கிய அதிமுக எம்பியின் கார்! அடுத்தடுத்த நாளில் நடந்த சோகம்

நேற்று விழுப்புரம் எம்பி ராஜேந்திரன் சென்ற கார் சாலை தடுப்புச்சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானதால் அதிமுகவினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

பள்ளியில் புகுந்து ஆசிரியையை கொலை செய்த வாலிபர் தற்கொலை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்யா என்ற 23 வயது ஆசிரியையை வாலிபர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து சர்மாரியாக வெட்டி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.