close
Choose your channels

ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா படத்தின் டைட்டில் மற்றும் முக்கிய தகவல்கள்!

Saturday, November 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில் இன்று அந்த இரண்டு படங்களின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டு படங்களில் ஒரு படத்தை ‘டான்’ இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்க இருப்பதாகவும் இன்னொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி - ஐஸ்வர்யா இணையும் படத்தின் சில தகவல்கள் கசிந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் டைட்டில் ’லால் சலாம்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு பவர்ஃபுல் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்தில் தான் நடிக்க இருப்பதை விஷ்ணுவிஷால் மறைமுகமாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் ஒரு கிரிக்கெட் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment