close
Choose your channels

ரஜினிகாந்த் - ஞானவேல் படத்தின் டைட்டில் இதுவா? உயிர் பெறும் ரஜினியின் செம்ம கேரக்டர்..!

Friday, August 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் ஞானவேல் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’வேட்டையன்’ என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தில் ஒரு சிறிய பகுதியாக வேட்டையன் கேரக்டர் அமைந்திருக்கும் என்பதும் அந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மீண்டும் அதே கேரக்டரின் டைட்டில் ரஜினிகாந்த் ஒரு படத்தை நடிக்க இருப்பதை அடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment