'தர்பார்' படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் பறந்த ரஜினி-நயன்தாரா

  • IndiaGlitz, [Saturday,August 17 2019]

'பேட்ட' வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மும்பையில் வரலாறு காணாத மழை காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. இதனையடுத்து 'தர்பார்' டீம் சென்னை திரும்பியது

இந்த நிலையில் மும்பைக்கு பதில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பை தொடர இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படக்குழுவினர் முடிவெடுத்ததை அடுத்து வரும் திங்கள் முதல் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனையடுத்து இன்று ரஜினிகாந்த், நயன்தாரா உள்பட படக்குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்றனர். ரஜினியும் நயன்தாராவும் அருகருகே விமானத்தில் அமர்ந்து பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள 'தர்பார்' திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகாவின் தயாரிப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More News

ஒரே நாளில் வெளியாகிறதா சூர்யா-சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்

தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற திருவிழா நாட்களில் பிரபலங்களின் திரைப்படங்கள் மோதுவது வழக்கமானதே. அந்த வகையில்

இறப்பதற்கு முன் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்த தமிழ் நடிகை

நான் இறந்த பின்னர் எனது தந்தையின் கல்லறை அருகேதான் என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக என் தந்தையை அடக்கம் செய்த இடத்திற்கு பக்கத்தில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் விட்டில் இந்த வாரத்தின் எலிமினேஷன் பட்டியலில் முகின், அபிராமி, லாஸ்லியா, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர்.

அஜித் ரசிகர்களால் பிரான்ஸ் திரையரங்கிற்கு நஷ்டம்: இனி தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகாதா?

அஜித் ரசிகர்களால் பிரான்ஸ் நாட்டில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ்' என்று திரையரங்கு நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவால் இனி அந்தத் திரையரங்கில் தமிழ் படங்கள் திரையிடப்படுமா?

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம் செய்யலாம்: ஏன் தெரியுமா?

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பேருதவியாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் ஏசி கோச்சில் டிராபிக் பிரச்சனை இன்றி