இணையத்தில் வைரலாகும் ரஜினி-த்ரிஷா புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் வைரலானது. அதேபோல் த்ரிஷாவும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றதாகவும் இணையதளங்களில் புகைப்படங்கள் வெளியானது

இந்த நிலையில் இன்று ரஜினியும், த்ரிஷாவும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பின் இடையே கிடைத்த இடைவெளியில் கோவில் ஒன்றுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தனர். கோவில் நிர்வாகிகள் ரஜினிக்கும் த்ரிஷாவுக்கும் மாலை மற்றும் பொன்னாடை மரியாதை அளித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் கடந்த சில நிமிடங்களாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில், 'கடவுள் போன்ற ஒரு மனிதருடன் இணைந்து கடவுளை வழிபட்டேன்' என்று கூறியுள்ளார்.

More News

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி

தமிழக அரசியலில் ஆளுமை நிறைந்த தலைவர்களாக இருந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர்களின் மறைவிற்கு பின்னர் பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் ஆசையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஆண்டாளை சின்மயி வடிவத்தில் பார்க்கின்றேன்: தமிழிசை

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவமாக பார்க்காமல் இந்த விஷயமும் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது.

வீடியோகேமுக்கு அடிமையாகி பெற்றோரை கொலை செய்த 19 வயது வாலிபர்

டெல்லியில் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையாகி தாய், தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்த 19 வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

'மீ டூ' விஷயத்தில் தமிழ் சினிமாவின் மெளனம் ஏன்? பிரபல நடிகர் ஆதங்கம்

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் இதுகுறித்து இன்னும் திரையுலகின் பிரபலங்கள் குரல் கொடுக்காமல் உள்ளனர்.

விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' விஜயலட்சுமி

கமல்ஹாசன் நடத்திய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தாலும் சக போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து மூன்றாம் இடத்தை பெற்றவர் நடிகை விஜயலட்சுமி.