close
Choose your channels

ஆண்டாளை சின்மயி வடிவத்தில் பார்க்கின்றேன்: தமிழிசை

Saturday, October 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவமாக பார்க்காமல் இந்த விஷயமும் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. வைரமுத்துவுக்கு ஆதரவான அரசியல் கட்சி தலைவர்கள் சின்மயி மீது குறை சொல்வதும், வைரமுத்துவுக்கு எதிரான அரசியல் கட்சிகள் சின்மயிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் ஆக்கி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக சுப.வீரபாண்டியன் டுவீட் செய்த நிலையில் தற்போது சின்மயிக்கு ஆதரவாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழிசை கூறியபோது, 'ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவத்தில் ஆண்டாள் முகத்திரையை கிழித்துக் கொண்டிப்பதாகவும், ஆண்டாளை சின்மயி வடிவத்தில் தான் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசியல் கலந்தால் பிரச்சனை திசை திரும்பிவிடும் ஆபத்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.