ரஜினிக்கு சாக்லேட் சிலை வைத்த சென்னை பேக்கரி

  • IndiaGlitz, [Tuesday,April 05 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி' இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

'கபாலி' திரைப்படம் வரும் மே மாதம் தேர்தல் முடிந்தபின்னர் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கபாலி' படத்தில் ரஜினியின் விதவிதமான போஸ்டர்களை பார்த்த சென்னையை சேர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று ரஜினியின் உருவத்தை 600 கிலோ சாக்லேட்டில் செய்து பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளனர்.


ரஜினியின் கபாலி' தோற்றம் கொண்ட இந்த சாக்லேட் சிலை, அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சிலை அருகில் நின்று இளம்பெண்கள் உள்பட பலர் செல்பி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.