எழுத்தாளர் ஞானி மறைவு: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

  • IndiaGlitz, [Monday,January 15 2018]

பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஞானி அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். எழுத்தாளர் ஞானி தமிழ்த்திரையுலகினர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதால் கோலிவுட் திரையுலகினர் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஞானியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'தான் ஞானியின் பெரிய ரசிகர் என்றும், நான் அவருக்கு நல்ல நண்பர் என்றும் அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு சரியென தோன்றியதை பயமின்றி பேசக்கூடியவர், எழுதக் கூடியவர் ஞாநி என தெரிவித்த ரஜினி அவரது ஆத்மா சாந்தியடைய தான் இறைவனை பிரார்த்தனை செய்வதாக கூறினார்

கடந்த 1 வாரத்துக்கு முன்புதான்  ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து மறைந்த ஞானி அவர்கள் தனது யூடியுப் சேனலில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என்பதும் அந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

பொங்கல் தினத்தில் வெளியான தெலுங்கு படங்களின் வசூல் விபரம்

பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி' மற்றும் நயன்தாரா நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ஜெய்சிம்ஹா.

பிரபுதேவாவின் 'குலேபகாவலி' ஓப்பனிங் வசூல் எப்படி?

'தேவி' படத்திற்கு பின்னர் பிரபுதேவா நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள திரைப்படம் 'குலேபகாவலி'. காமெடியில் கலக்கும் படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ள இந்த படத்தின் ஓப்பனிங் வசூல்

நல்ல ஓப்பனிங் வசூலை பெற்ற சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்'

சீயான் விக்ரம் நடித்த படம் வெளிவரும் போதெல்லாம் அவரது ரசிகர்களுக்கு திருநாளாக இருக்கும் நிலையில் பொங்கல் திருநாளில் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள 'ஸ்கெட்ச்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ஓப்பனிங் வசூல் விபரம்

இந்த ஆண்டு பொங்கல் தின பரிசாக சூர்யாவின் ரசிகர்களுக்கு வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

தமிழகத்தின் தலையெழுத்தை ரஜினியால் மாற்ற முடியும்: துக்ளக் குருமூர்த்தி

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும், திராவிட கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் இருக்க ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல்