close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டை பெற்ற பொங்கல் ரிலீஸ் படம்

Friday, January 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பொங்கல் விருந்தாக சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்' மற்றும் பிரபுதேவாவின் 'குலேபகாவலி' ஆகிய படங்கள் வெளிவந்த நிலையில் விக்ரமின் ஸ்கெட்ச் திரைப்படம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

நேற்று 'ஸ்கெட்ச்' திரைப்படம் ரஜினிக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தயாரிப்பாளர் தாணுவுடன் இந்த படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்தவுடன் தாணுவுக்கும், படக்குழுவினர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். 'கடைசி 30 நிமிடங்கள் படம் சூப்பர் என்றும் எதிர்பாராத வித்தியாசமான மெசேஜ் உடன் கூடிய கிளைமாக்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் ரஜினி படக்குழுவினர்களை பாராட்டினார்.

இந்த தகவலை இயக்குனர் விஜய்சந்தர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு ரஜினிக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment