close
Choose your channels

'லால் சலாம்' விழாவில் ஐஸ்வர்யா சொன்ன சங்கி வார்த்தை: ரஜினிகாந்த் விளக்கம்..!

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ’லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது அதில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’தனது அப்பாவை சங்கி என்று கூறுவது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் சங்கியாக இருந்தால் ’லால் சலாம்’ போன்ற படங்களில் நடித்திருக்க மாட்டார்’ என்றும் கூறினார்.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இது குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். ’லால் சலாம்’ படத்தை விளம்பரப்படுத்தவே சங்கி என்ற வார்த்தையை ஐஸ்வர்யா பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறதே என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ’சங்கி’ என்பது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புபவர், அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதே அவருடைய பார்வை என்று கூறினார்

இதனை அடுத்து செய்தியாளர் ’லால் சலாம்’ புரமோஷனுக்காக ஐஸ்வர்யா அப்படி பேசினாரா என்று கேட்டதற்கு ’அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை’ என்று கூறினார்

இதனை அடுத்து ’லால் சலாம்’ படம் எப்படி வந்துள்ளது என்று கேட்டதற்கு ’நன்றாக வந்திருக்கிறது, சூப்பராக வந்திருக்கிறது’ என்று கூறினார். இந்த படத்தில் என்ன கருத்து உள்ளது என்று கேட்டதற்கு ’நீங்கள் படம் பார்த்தால் தெரியும், மத நல்லிணக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள்’ என்று ரஜினிகாந்த் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.