முதல் காதலியை இன்று வரை தேடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Tuesday,October 29 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமானவர் என்பதும் உலகம் முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. அவருடைய படம் வெளியாகும் தினத்தை ஒரு திருவிழா போல அவரது ரசிகர்களால் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் முதல் காதல் குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரஜினியுடன் பாட்ஷா படத்தில் நடித்த தேவன் என்ற நடிகர் சமீபத்தில் மலையாள ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ’பாட்ஷா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்த போது என்னையும் சக நடிகர்கள் சிலரையும் ரஜினிகாந்த் அவரது அறைக்கு விருந்துக்கு அழைத்தார். அந்த விருந்தின் போது நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். அப்போது ரஜினி அவர்கள் தன்னுடைய முதல் காதல் குறித்த நினைவுகளை மனம் விட்டுப் பேசினார்

ரஜினிகாந்த் பெங்களூரில் கண்டக்டராக இருந்தபோது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தவறான பாதையில் பேருந்தில் ஏறியதை கண்டித்ததாகவும், அதன் பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும் முதல் சந்திப்பே வாக்குவாதமாக இருந்தாலும் அதன் பின் இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள் என்றும் கூறினார்

நிர்மலா என்ற அந்தப் பெண் ரஜினியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்துவிட, ரஜினிகாந்த் ஒருநாள் நிர்மலாவிடம், தான் நடிக்கவிருக்கும் நாடகத்தை பார்த்து வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினியின் நாடகத்தை அவரும் பார்த்து விட்டு அவருடைய நடிப்பை பார்த்து அசந்து, ரஜினியின் அனுமதி இல்லாமலேயே அவருக்காக அடையாறு பிலிம் இன்ஸ்டியூட்டில் விண்ணப்பம் அனுப்பினார் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட அடையார் பிலிம் இன்ஸ்டியூட் ரஜினியை பயிற்சி வகுப்புக்கு அழைத்தனர். ரஜினியை அடையாறுக்கு அனுப்ப பணம் ஊக்கமும் அளித்து அனுப்பி வைத்தவர் அந்த நிர்மலா தான். இன்று ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அதற்கு முதன் முதலில் ஒரு அஸ்திவாரம் போட்டவர் அந்த நிர்மலா தான் என்பது குறிப்பிடத்தக்கது

அதன் பின்னர் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடயூடிட்டில் படித்துவிட்டு ஒரு சில படங்களில் வெற்றிகரமாக நடித்துவ்விட்டு மீண்டும் பெங்களூர் சென்ற போது, நிர்மலா சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது வீடு காலி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என்பதும் ரஜினிக்கு தெரிய வந்தது. அதன் பின் பல இடங்களில் அவர் தேடிய போதும் அந்த நிர்மலா என்ற பெண்ணை அவரால் இன்று வரை பார்க்க முடியவில்லை என்றும் இன்று வரை அவரை தேடி வருவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக நடிகர் தேவன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்

கிட்டத்தட்ட இதே கதைதான் ரஜினிகாந்த் நடித்த ‘குசேலன்’ திரைப்படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்: சுஜித்தின் உயிர் கடைசியாக இருக்கட்டும்! 

மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து இன்னொரு சிறுவன் இன்று பலியாகியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பல உயிர்கள் இதே போல் இழக்கப்பட்டிருந்த நிலையிலும்

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் போலீசார்

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக

மீண்டும் மண்ணுக்குள் சென்ற சுஜித்: கண்ணீருடன் புதைக்கப்பட்ட உடல்!

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரைக் காப்பாற்ற எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து இன்று அதிகாலை சுஜித்தின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது

சுஜித் மரணம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க மீட்புக்குழுவினர் கடந்த 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய நிலையில் சுஜித்தின் உடலை மட்டுமே மீட்க முடிந்தது.

தோல்வியில் முடிந்த மீட்புப்போராட்டம்: 80 மணி நேரத்திற்கு பின் பிணமாக மீட்கப்பட்ட சுஜித்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கடந்த வெள்ளியன்று மாலை சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில்