தலைவர் 169: ரஜினிகாந்த் மகளாக நடிக்கிறாரா இந்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாக வதந்தி ஒன்று மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 169’ திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது மட்டுமே அதிகாரபூர்வ அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவதோடு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி வைரலானது. தற்போது கடந்த சில மணி நேரங்களாக ரஜினியின் மகளாக பிரபல நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா, சமீபத்தில் வெளியான சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. ’தலைவர் 169’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிப்பது உண்மை என்றால் மூன்றாவது முறையாக இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அவரை பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி அடைந்தது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அவரைப் பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி பெற்றது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

'வலிமை' நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அஜித் தரப்பு விளக்கம்: அன்று சொன்னதுதான் இன்றும்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ஒரு பக்கம் குடும்ப ஆடியன்ஸ்களால் திரையரங்குகள் நிரம்பி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில்

ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை ஓவியா… வைரலாகும் நீச்சல் உடை புகைப்படம்!

“களவாணி“ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனால்

அசத்தும் சிங்கப்பெண்… போர் பகுதியில் இருந்து 800 இந்திய மாணவர்களை மீட்ட 24 வயது பெண் பைலட்!

கடும் போர் நிகழும் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 800 இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார்

புத்தக திருவிழாவில் திருடிய டிவி நடிகை கைது: 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

புத்தகத்திருவிழாவுக்கு வந்த பொதுமக்களின் பர்ஸ்களை திருடிய தொலைக்காட்சி நடிகை கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.