தூத்துகுடி துப்பாக்கி சூடு: ரஜினிகாந்த் நிவாரண உதவி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தையும் காயம் அடைந்தவர்களையும் சந்திக்க இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துகுடி சென்றுள்ளார். தூத்துகுடி விமான நிலையத்தில் இருந்து அவர் தற்போது நகருக்குள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் அளித்த தகவலின்படி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் ரஜினிகாந்த் நிவாரண உதவி செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உடை மற்றும் பழங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த சந்திப்பு முடிந்ததும் தனியார் விடுதி ஒன்றில் ஓய்வு எடுக்கும் ரஜினிகாந்த், அங்கு ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

பின்னால் பார்த்து கொண்டே போனால் முன்னேற முடியாது: தூத்துகுடி செல்லும் முன் ரஜினி பேட்டி

சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 அப்பாவிகள் பலியான நிலையில் இன்று பலியானவர்களின் குடும்பத்தினர்களை சந்திக்கவும்,

பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா.சீனிவாசன் காலமானார்

பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 88

'காலா' படத்திற்கு கர்நாடகா தடை: 

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

தூத்துகுடி செல்கிறார் ரஜினிகாந்த்

சமீபத்தில் தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய அந்த பகுதி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அப்பாவிகள் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

'அருவி' இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல்

அதிதி பாலன் நடிப்பில் இயக்குனர் அருண்பிரபு இயக்கிய 'அருவி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.