'கபாலி'யின் புதிய சாதனை

  • IndiaGlitz, [Monday,May 23 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் டீசர் இந்திய அளவில் சாதனை செய்தது மட்டுமின்றி உலக அளவில் அதிக லைக்குகள் பெற்ற வீடியோவில் இரண்டாவது இடத்தை பிடித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் 'கபாலி' படத்தின் டீசர் தற்போது 19 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 19 மில்லியன் பார்வையாளர்களை பெறும் முதல் இந்திய வீடியோ இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 'தெறி', 'ஐ', 'சுல்தான்' ஆகிய டீசர்களின் சாதனைகளை முறியடித்துள்ள 'கபாலி' டீசர், தற்போது அசைக்க முடியாத இடத்தில் உள்ளதால் இந்த சாதனையை முறியடிக்க அடுத்த எந்த படத்தின் டீசர் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமன்னாவுக்கு அண்ணனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்

விஷால் நடித்த 'மருது' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விஷாலின்...

சென்னையில் 'மருது' வசூல் எவ்வளவு?

விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் முத்தையா இயக்கிய 'மருது' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள்...

'தெறி' படத்தின் கடந்த வார சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'தெறி' திரைப்படம் 50நாட்களை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

ஜெயம் ரவியின் முதல் த்ரில்லிங் அனுபவம் இதுதான்...

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் கால்பந்தாட்ட ரசிகர்களாக இருப்பது தெரிந்ததே...

இன்று முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அடுத்த அவதாரம் ஆரம்பம்

தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களில் வெற்றி பெற்றவர்...