close
Choose your channels

'கபாலி'யின் புதிய சாதனை

Monday, May 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் டீசர் இந்திய அளவில் சாதனை செய்தது மட்டுமின்றி உலக அளவில் அதிக லைக்குகள் பெற்ற வீடியோவில் இரண்டாவது இடத்தை பிடித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் 'கபாலி' படத்தின் டீசர் தற்போது 19 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 19 மில்லியன் பார்வையாளர்களை பெறும் முதல் இந்திய வீடியோ இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 'தெறி', 'ஐ', 'சுல்தான்' ஆகிய டீசர்களின் சாதனைகளை முறியடித்துள்ள 'கபாலி' டீசர், தற்போது அசைக்க முடியாத இடத்தில் உள்ளதால் இந்த சாதனையை முறியடிக்க அடுத்த எந்த படத்தின் டீசர் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.