ரஜினியின் 'கபாலி' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Thursday,April 07 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் இந்த படம் வரும் மே மாதம் தேர்தல் முடிந்தவுடன் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது வந்திருக்கும் புதிய தகவலின்படி இந்த படம் ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இருப்பினும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியான ரிலீஸ் தேதி தெரியவரும்

அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

More News

34 வருடங்களுக்கு பின் ரீமேக் ஆகும் படத்தில் அனிருத்

கடந்த 1982ஆம் ஆண்டு நாரதமுனியாக விசு நடித்து இயக்கிய திரைப்படம் 'மணல் கயிறு'. எஸ்.வி.சேகர், மனோரமா...

இசைஞானியை மிஸ் செய்த சிவகார்த்திகேயன்

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 'ஓயே' திரைப்படம் விரைவில் வெளியாக படக்குழுவினர் தரப்பில் அனைத்து...

ஏ.ஆர்.ரஹ்மானின் '24' டிராக் லிஸ்ட்

சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள '24' படத்தின் பாடல்கள் வரும் 11ஆம் தேதி...

ஒரே மாத இடைவெளியில் ஹாட்ரிக் அடிப்பாரா சமந்தா?

கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவதோடு இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் சமந்தா நடித்து வருகிறார்...

'காக்கா முட்டை'க்கு கிடைத்த மேலும் ஒரு அந்தஸ்து

தனுஷின் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான 'காக்கா முட்டை' திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, உலக திரைப்பட விழாக்களில்....