முன்னாள் முதல்வரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த். மகன் வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,March 18 2023]

முன்னாள் முதல்வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என சந்தித்த புகைப்படத்தை முன்னாள் முதல்வரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஆக இருந்தவர் உத்தவ் தாக்கரே. இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பையில் அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளார். உத்தவ் தேவ் தாக்கரே அவருடைய மனைவி ராஷ்மி மற்றும் மகன்கள் ஆதித்யா, தேஜாஸ் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வரவேற்பு கொடுத்த புகைப்படம் ஆதித்யாவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்ட ரஜினிகாந்த் ஏற்கனவே அவரை சந்தித்த நிலையில் தற்போது பால்தாக்கரேவின் மகனை அவருடைய இல்லத்தில் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த கிரிக்கெட் போட்டி காண்பதற்காக மும்பை சென்ற ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவருடைய குடும்பத்தையும் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'சிவா மனசுல சக்தி' அனுயா இவ்வளவு அழகாக பாடுவாரா? வைரல் வீடியோ..!

'சிவா மனசுல சக்தி' படத்தில் நாயகியாக நடித்த நடிகை அனுயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் மிக இனிமையாக பாடும் காட்சி உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

'பாட்ஷா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்? கணவர் குழந்தையுடன் அசத்தல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

'நாட்டு நாட்டு' பாடலுக்கு செம நடனம் ஆடிய பிரபுதேவா குழுவினர்.. வைரல் வீடியோ..!

 பிரபுதேவா மற்றும் அவரது நடன குழுவினர் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

'மேக்கிங் ஆஃப் வந்தியத்தேவன்': செம வீடியோவை வெளியிட்ட லைகா..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள

சிம்பு ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள 'பத்து தல' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது