close
Choose your channels

'சிவா மனசுல சக்தி' அனுயா இவ்வளவு அழகாக பாடுவாரா? வைரல் வீடியோ..!

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’சிவா மனசுல சக்தி’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை அனுயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் மிக இனிமையாக பாடும் காட்சி உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்த ’சிவா மனசுல சக்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்தில் நாயகியாக நடித்த அனுயாவுக்கு அதன் பிறகு வாய்ப்புகள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. ’மதுரை சம்பவம்’ ’நகரம்’ ’நஞ்சுபுரம்’ ’நண்பன்’ ’நான்’ உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த அனுயா, ஒரு சில சீரியல்களிலும் நடித்தார் என்பதும் பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் நபராக 7 நாட்களில் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அனுயா சமூகவலைகளில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதில் சமீபத்தில் அவர் ஒரு ஆங்கில பாடலை மிகவும் இனிமையாக பாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவருடைய குரலை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இவ்வளவு பாடும் திறமை உள்ளவரா அனுயா? என ஆச்சரியமாக பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.