'வெந்து தணிந்தது காடு' டிரைலர் ரிலீஸ் விழாவில் ரஜினி இல்லையா? இந்த இரு விஐபி மட்டும் தான்!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

முதல்கட்டமாக இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்பதும் இதற்கான பிரமாண்டமான அரங்குகள் தயார் நிலையில் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் பாடல் ரிலீஸ் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வருகை தர இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் இந்த விழாவின் அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இரண்டு விஐபிக்கள் மட்டுமே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

காலை டிபன் செய்வதில் தகராறு.. மனைவி, தாய், மகள்கள் என 5 பேர்களை கொலை செய்த சைக்கோ!

காலை உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாயார், மனைவி மற்றும் 3 மகள்களை கொலை செய்த சைக்கோ ஒருவருடைய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: கைதான பிரபலம் இவரா?

பிரபல நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவரே கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'தளபதி 67' படத்தின் முக்கிய கேரக்டரில்.... வைரல் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67' படம் குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

தாய்லாந்து நீச்சல் குளத்தில் வரலட்சுமி: செம வைரலாகும் வீடியோ!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி தாய்லாந்து நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு

'கோப்ரா' பட்ஜெட் இத்தனை கோடியா? அதில் விக்ரம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இந்த படம் நாளை விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும்