close
Choose your channels

'கோப்ரா' பட்ஜெட் இத்தனை கோடியா? அதில் விக்ரம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Tuesday, August 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கோப்ரா’. இந்த படம் நாளை விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்துள்ளதால் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை உருவான விக்ரம் படங்களிலேயே 'கோப்ரா’ படம் தான் மிக அதிக பட்ஜெட்டில் தயாராகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி என்றும் இதில் விக்ரமின் சம்பளம் மட்டுமே 25 கோடி என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் இந்த படத்திற்காக 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதும் அவருக்கு இந்த படம் திரையுலக வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தில் மிருணாளினி ரவி, மீனாட்சி, கேஎஸ் ரவிக்குமார், இர்பான் பதான், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 3 ஆண்டுகளாக உருவாகி வந்தது என்பதும் குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இந்த படம் தாமதமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.