சாத்தான்குளம் விவகாரம்: ரஜினியின் வித்தியாசமான அணுகுமுறை

  • IndiaGlitz, [Sunday,June 28 2020]

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது என்று கூறலாம். அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு இணையாக இந்த மரணம் கருதப்பட்டு சமூக வலைதளங்களில் பலர் கொந்தளித்து எழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக தமிழ் திரையுலக பிரபலங்கள் சூர்யா உள்பட பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் இதுகுறித்து தங்களுடைய ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் காவல் துறையினரால் மர்மமான முறையில் மரணமடைந்த ஜெயராஜின் மனைவி மற்றும் ஃபென்னிக்ஸ் அவர்களின் தாயாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருப்பதாக ரஜினியின் தரப்பினர் உறுதி செய்துள்ளனர்

திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கண்டனங்களை பதிவு செய்து தங்களுடைய ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினர்களை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதலாக சில வார்த்தைகள் பேசிய ரஜினியின் வித்தியாசமான அணுகுமுறையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்

More News

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: 4வது எம்.எல்.ஏ என்பதால் தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின்

'சிங்கம்' சீரீஸ் படங்களை இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி

இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் பலர் வீட்டிற்கு கூட செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் கொரோனா வைரசிடம் இருந்து

ரூ.36 ஆயிரம் கரெண்ட் பில்: தனுஷ் நாயகியும் குற்றச்சாட்டு

கரண்ட் தான் ஷாக் அடிக்கும் என்றால் தற்போது கரன்ட் பில்லும் மக்களைக் ஷாக் அடித்து வருவதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம் 

மணமகனுக்கு கொரோனா: திருமணம் நடத்திய குடும்பத்தினர்களுக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து இந்த திருமணத்திற்கு அளவுக்கு அதிகமான நபர்களை அழைப்பு

தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என்றும், கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர்