பிரதமர் மோடி பலசாலியா? என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்தார். 'எந்த 7 பேர் என்பது குறித்த சர்ச்சைக்கும், பாஜக ஆபத்தான கட்சியா? என்பது குறித்த விளக்கத்தையும் அப்போது அவர் அளித்தார்.

மேலும் பாஜகவுக்கு எதிராக அமைக்க முயற்சி செய்து வரும் 'மெகா கூட்டணி' குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கின்றார் என்றால் அந்த பத்து பேர் பலசாலியா? அல்லது பத்து பேரை எதிர்கொள்பவர் பலசாலியா? என்று மறுகேள்வியையே அந்த கேள்விக்கு பதிலாக கூறினார். இதனையடுத்து ஒரு நிருபர் 'பத்து பேர்தான் பலசாலிகள்' என்று கூற அதற்கு ரஜினிகாந்த், 'பத்து பேர்கள் பலசாலிகள் என்றால் அந்த பத்து பேரை எதிர்க்கும் ஒருவர் அதைவிட பலசாலிதானே! என்று கூறினார்.

மேலும் 'இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத்தான் தேவை என்று கமல்ஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு 'கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

More News

'எந்த 7 பேர்' என்பது குறித்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த ஒரு பேட்டி அளித்தாலும் அந்த பேட்டியில் உள்ள ஒரு சிறுகுறை பெரிதாக்குவது, அல்லது அவர் சொன்னதை திரித்து கூறி பரபரப்பை ஏற்படுத்துவது என்பது

ரஜினி தெரிவித்த கருத்து சரிதான்: முதலமைச்சர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நிமிடங்கள் பேட்டி அளித்தால் ஒருசில ஊடகங்கள் அந்த பேட்டியை திரித்து செய்தியாக வெளியிட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடத்தும் நிலை காணப்படுகிறது.

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ரியல் சுந்தர் ராமசாமி

சமீபத்தில் வெளியான 'சர்கார்' படத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் சுந்தர் ராமசாமி என்ற ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ கேரக்டரில் நடித்த விஜய், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை

சூப்பர் ஹீரோக்களின் படைப்பாளி ஸ்டேலீ காலமானார்.

உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களை காமிக்ஸ்ஸில் உருவாக்கிய ஸ்டேன் லீ என்ற உலகப்புகழ் பெற்ற கிரியேட்டர் உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார்

கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட்டியலில் குவியும் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த பெரிய படங்களின் ரிலீஸ் கிறிஸ்துமஸ் திருநாளில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.