close
Choose your channels

'லியோ' படம் வெற்றி அடையுமா? தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி..!

Monday, October 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’தலைவர் 170’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. அதன் பிறகு தற்போது தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடிக்கு ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ’புவனா ஒரு கேள்விக்குறி’ என்ற படத்திற்காக 1977ஆம் ஆண்டு இங்கு வந்தேன். அதன்பிறகு 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பகுதிக்கு தற்போது தான் மீண்டும் வருகிறேன். இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அன்பான மக்கள், அவர்களை பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒன்றே ஒன்று அவர்கள் எல்லோருடனும் சேர்ந்து புகைப்படம் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்

மேலும் ‘லியோ’ திரைப்படம் குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் '‘லியோ’ மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள், அந்த படம் வெற்றி அடைய நான் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.