மீண்டும் இணைகிறதா 'அண்ணாத்த' கூட்டணி?

  • IndiaGlitz, [Monday,September 06 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒருபக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ’அண்ணாத்த’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் இந்த படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லைக்கா நிறுவனம் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'அங்கடித்தெரு' கனவு நனவாகிறது: தமிழக அரசுக்கு நன்றி கூறிய வசந்தபாலன்

தமிழகத்தில் உள்ள கடைகளில் நின்று கொண்டே பணி புரியும் ஊழியர்களுக்கு இருக்கைகள் அமைக்க வேண்டும் என தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளதற்கு இயக்குனர் வசந்தபாலன் பாராட்டியுள்ளார்

ஈரம் சொட்டும் இரவு, பிளாக் அண்ட் ஒயிட் காஸ்ட்யூம்: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அதுமட்டுமின்றி அவ்வப்போது

மறுபடியும் வருவேன், நான் கொடுக்குறதுதான் ஜட்ஜ்மெண்ட்: 'ப்ரெண்ட்ஷிப் டிரைலர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடித்த முதல் திரைப்படமான 'ப்ரெண்ட்ஷிப்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி அதன் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நான் நடிச்சிருந்தா விஜய்சேதுபதி கிடைச்சிருக்க மாட்டாரு: 'பாய்ஸ்'நடிகரின் கூலான பேட்டி

நான் மட்டும் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்திருந்தால் விஜய் சேதுபதி என்ற அருமையான நடிகர் தமிழ் திரை உலகிற்கு கிடைத்திருக்க மாட்டார் என ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் பேட்டி

'அண்ணாத்த', 'வலிமை' மோதுவது உறுதியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ