ஒரே நேரத்தில் ரஜினியின் இரண்டு படங்களின் படப்பிடிப்பா?

  • IndiaGlitz, [Sunday,April 09 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார் என்றும் அவரது சம்பந்தமான காட்சிகள் சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் 170-வது திரைப்படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேலு இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமான தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ’லால் சலாம்’ மற்றும் ’தலைவர் 170’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் ரஜினிகாந்த் மாறி மாறி கலந்து கொள்வார் என்றும் ஒரே நேரத்தில் ரஜினியின் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

’லால் சலாம்’ திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமானும், ‘தலைவர் 170’ திரைப்படத்திற்கு அனிருத்தும் இசையமைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கர்நாடக தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் சிக்கலில் மாட்டிய போனிகபூர். பரபரப்பு தகவல்..!

கர்நாடக தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி காரணமாக போனி கபூர் காரில் இருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக

'பொன்னியின் செல்வன் 2' ரன்னிங் டைம் எவ்வளவு? முதல் பாகத்தை விட அதிகமா? குறைவா?

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும்

தமிழ் புத்தாண்டில் 8 திரைப்படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்கள் குஷி..!

ஒவ்வொரு பண்டிகையின் போது தமிழ் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகும் என்பதும் அவை சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வரும் தமிழ் புத்தாண்டு

நயன்தாரா 75 வது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; வீடியோ வைரல்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா என்பவர் இயக்க இருக்கிறார் என்பதையும் பார்த்தோம்.

'நயன்தாரா 75' படத்தில் இணைந்த 8 நட்சத்திரங்கள்: படக்குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சமீபத்தில் ஜெய் இணைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் 8 நட்சத்திரங்கள்