close
Choose your channels

தமிழ் புத்தாண்டில் 8 திரைப்படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்கள் குஷி..!

Sunday, April 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு பண்டிகையின் போது தமிழ் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகும் என்பதும் அவை சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் 8 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ருத்ரன்’: ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் படங்களில் இந்த படம் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘தமிழரசன்’; விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது தான் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’திருவின் குரல்’: லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அருள்நிதி, பாரதிராஜா நடிப்பில் உருவான திரைப்படம் ’திருவின் குரல்'. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் இந்த படம் அருள்நிதிக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும்.

‘சொப்பன சுந்தரி’: சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்த திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் ’சொப்பன சுந்தரி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சாகுந்தலம்’: சமந்தா நடித்த சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘யானை முகத்தான்’: யோகி பாபு சமீப காலமாக சில படங்களில் காமெடி கேரக்டரில் மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த ஒரு திரைப்படம் தான் ’யானை முகத்தான்’ இந்த படம் அவருடைய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்க வருவது.

மேலும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ‘ரிப்பப்பரி’ மற்றும் ’இரண்டில் ஒன்று பார்த்து விடு’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.