ரஜினியின் அடுத்த சமூக சிந்தனையுடன் கூடிய வாய்ஸ்

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்காக தனது டுவிட்டரில் வாய்ஸ் கொடுப்பது வழக்கம். பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, நீட், அனிதா மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தனது டுவிட்டரில் வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த் தற்போது நதிகள் இணைப்பிற்காக மீண்டும் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:  ''இரத்த நாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் இரத்தநாளங்கள்... அதைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் ஜீவநதியாக்க சத்குரு எடுக்கும் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்' என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நதிகள் இணைப்பிற்காக கடந்த பல வருடங்களாக ரஜினிகாந்த் குரல் கொடுத்து வருவது தெரிந்ததே. நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தவர் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதி, ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஏற்கனவே நட்சத்திர கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரான சிம்பு இணைந்துள்ளார்.

முன்னணி தமிழ் நடிகர்களுக்கு சமமானவர் மகேஷ்பாபு: கலைப்புலி எஸ்.தாணு

நேற்று சென்னையில் நடைபெற்ற 'ஸ்பைடர்' இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட்டின் பல பிரமுகர்கள் மகேஷ்பாபுவின் தமிழ் எண்ட்ரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் மகேஷ்பாபு: ஏ.ஆர்.முருகதாஸ்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தது.

முருகதாஸ் 'நீட்' சப்ஜெட்டையும் தொட்டுருவார்னு நினைக்கிறேன்: விஷால்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ் படமான 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரபல தமிழ் நடிகர்களின் விழா போன்று பிரமாண்டமாக நடந்தது.

'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. கமல்ஹாசனின் புதிய டுவீட்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது டுவிட்டரில் சமூக கருத்துக்களை தைரியமாக கூறி வரும் நிலையில்