இன்று ரஜினி-அமித்ஷா சந்திப்பு நடக்குமா?

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரவிருக்கும் நிலையில் முதல்வர், துணை முதல்வர் உள்பட பல பிரபலங்கள் அவரை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகையின்போது அவர் ரஜினியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அமித்ஷாவின் நிகழ்ச்சி நிரலில் ரஜினியை சந்திக்க அவர் போயஸ் தோட்டம் போகவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அமித்ஷா தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா-ரஜினி சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உறுதியளித்த நிலையில் தற்போது உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி-அமித்ஷா சந்திப்பு நடந்தால் அது நிச்சயம் மரியாதை நிமித்த சந்திப்பாக மட்டும் இருக்காது என்றும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
 

More News

இளைஞர் மீது கார் மோதிய விபத்து: பிக்பாஸ் சினேகனுக்கு வந்த சிக்கல்!

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.

ஒரு லைக்குக்கு இத்தனை விசாரணையா? போப் ஆண்டவரைச் சுற்றும் புது சர்ச்சை!!!

சமீபத்தில் பதிவிடப்பட்ட ஒரு பிகினி உடையணிந்த மாடல் புகைப்படத்திற்கு போப் ஆண்டவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து லைக் செய்யப்பட்டதாகப் புது சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது.

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை தர இருக்கும் நிலையில் அவரது முன்னிலையில் ஒரு சில பிரபலங்கள் பாஜகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ பைடனின் மந்திரி சபையில் மேலும் ஒரு இந்தியர்… களைக்கட்டும் புது நியமனம்!!!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது நிர்வாகச் சபையிலும்

அந்த மூன்று வருடங்கள்: த்ரிஷாவின் மலரும் நினைவுகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி யூனிசெப் இந்தியாவின் நல்லெண்ண தூதராக பதவியேற்றதையடுத்து