விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

  • IndiaGlitz, [Friday,February 22 2019]

விஜயகாந்தின் தேமுதிக கட்சி, ஒரே நேரத்தில் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியில் பேசி வருவதோடு எந்த கூட்டணியில் இணைவது என்ற குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. கொள்கை, வெற்றி குறித்தெல்லாம் கவலைப்படமால் எந்த கூட்டணி அதிக தொகுதிகள் தருகிறதோ, எந்த கூட்டணி பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் தர சம்மதிக்கின்றதோ, அந்த கூட்டணியில் இணைய ஆலோசனை செய்து வருகிறது. கடந்த 2016ஆம் தேர்தலில் இதேபோன்று தான் எந்த கூட்டணி என்ற குழப்பமடைந்து கடைசியில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்தை ரஜினிகாந்த் சந்திப்பது உடல்நலம் விசாரிக்கவே என்று கூறப்பட்டு வந்தாலும், அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் இணைய வேண்டும் என்பதை ரஜினிகாந்த் வலியுறுத்துவார் என்றே கணிக்கப்படுகிறது. இது உண்மையா? என்பது விஜயகாந்தை சந்தித்த பின்னர் ரஜினி அளிக்கும் பேட்டியில் தெரிய வரும்

More News

கமல்ஹாசனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவுரை

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் கட்சியை அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்ய அதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில்

திட்டமிட்ட தேதிக்கு முன்னரே ரிலீஸ் ஆகும் 'காஞ்சனா 3'

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஒரே தொகுதியில் களமிறங்கும் கனிமொழி, தமிழிசை, ராதிகா?

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் ஸ்டெர்லைட் பிரச்சனை தொகுதியான தூத்துகுடி இம்முறை நட்சத்திர தொகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது.

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட

'தல'க்கு பதில் 'தளபதி': சத்யஜோதியுடன் இணையும் சிவா?

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சிவா, மீண்டும் சத்யஜோதி தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.