close
Choose your channels

'வேட்டையன்' படத்தின் மாஸ் தகவல்.. ரஜினியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Monday, May 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் ரஜினி காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் ஞானவேல் உள்பட ’வேட்டையன்’ படக்குழுவினர்களிடம் இருந்து ரஜினிகாந்த் விடைபெறும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளில், கேரளா உள்பட இந்தியாவின் சில பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் ரஜினியின் காட்சிகள் இன்றுடன் முடிந்து விட்டதாகவும் இதனை அடுத்து வேறு சில நடிகர்களின் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து இயக்குனர் ஞானவேல் உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் ரஜினிகாந்த் விடைபெற்ற காட்சியும், ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் வழியனுப்பி வைத்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுக்கும் ரஜினிகாந்த், அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment