'விடுதலை 2' படத்திற்கு முன்பே இன்னொரு படத்தை முடித்துவிட்ட ராஜீவ் மேனன்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,July 26 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ’விடுதலை 2’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு முன்பே அவர் இன்னொரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் பணியை செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’வெப்பன்’. குகன் சென்னியப்பன் என்பவரின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இயக்குனர் குகன் சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த ராஜீவ் மேனன் தனது பகுதியின் டப்பிங் பணி செய்து வரும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

ஜிப்ரான் இசையில் பிரபு ராகவ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

More News

தல தோனியின் 'எல்ஜிஎம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஸி தோனி தொடங்கிய தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'எல்ஜிஎம்'  என்ற படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு

20 வருடங்கள் கழித்து சந்தித்த Boys பரத், மணிகண்டன்

IndiaGlitz சார்பில் நடிகர் பரத் அவர்களுக்கு Fans Meet ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த Fans Meet-

எதிர்நீச்சல் நந்தினி,ஆதிரை,ரேணுகா மற்றும் கதிர் நேர்காணல்

எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் நடிகர்கள் நந்தினி,ஆதிரை,ரேணுகா மற்றும் கதிர் ஆகியோர் இணைந்து இது வரை எந்த ஒரு YouTube சேனலிற்கும் நேர்காணல்

சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்தில் அதிதி ஷங்கர்? பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு

40 ஆண்டுகால ஹாலிவுட் நண்பரை சந்தித்த கமல்ஹாசன்.. இணைந்து பணியாற்றிய மலரும் நினைவுகள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் 40 ஆண்டு கால ஹாலிவுட் நண்பரை  சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து பணிபுரிந்த மலரும் நினைவுகளை பகிர்ந்த