எதிர்பாராததை எதிர்பாருங்கள்: பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இன்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று முடிந்து விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்றைய படப்பிடிப்பு முடிந்த பின்னர் வெளியான செய்திகளின் அடிப்படையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் எதிர்பார்த்தபடியே ராஜூ தான் என செய்திகள் வெளியாகியுள்ளது. ராஜூ தான் டைட்டில் வின்னர் என்ன கடந்த சிலவாரங்களுக்கு முன்னரே உறுதி செய்யப்பட்டாலும் திடீரென பிரியங்காவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு அனுதாப ஓட்டுக்கள் அதிகமானதாகவும் அதனால் அவர் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரமாக இருந்தாலும் எதிர்பார்த்தபடியே ராஜூ தான் நேற்று டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார் என்பதும், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரியங்காவுக்கு இரண்டாவது இடமும், பாவனிக்கு 3வது இடமும் கிடைத்துள்ளது என்பதும், அமீர் மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் 4வது மற்றும் 5வது இடம் கிடைத்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ தான் என்ற தகவல் வெளியானதில் இருந்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும், இரண்டாம் இடம் பெற்ற பிரியங்காவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.