கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: கோபி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். அவரை மீட்க தமிழக, கர்நாடக மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நட்த்தியது. இதன்பயனாக 108 நாட்களுக்கு பின்னர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தனக்கடத்தல் வீரப்பன் உள்பட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் வீரப்பன் உள்பட 4 பேர் விசாரணையின்போது மரணம் அடைந்துவிட்டனர். ரமேஷ் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். எனவே எஞ்சிய 9 பேர் இன்று கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பின்படி உயிருடன் இருக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேர் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதரங்கள் இல்லாததாலும், குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததாலும் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

More News

ஐஸ்வர்யாவை நல்லவராக்கும் முயற்சியில் பிக்பாஸ் செய்யும் தந்திரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. வரும் வெள்ளி அன்று இறுதிப்போட்டி நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? என்பது தெரிந்துவிடும்

காட்பாதருக்கு இணையானது 'சண்டக்கோழி 2: விஷால்

“விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' படத்தின் இசைவெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

'விஸ்வாசம்' பாடல் குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ்

முதல் பட சம்பளத்தை விக்ரம் மகன் துருவ் யாரிடம் கொடுத்தார் தெரியுமா?

சீயான் விக்ரம் மகன் துருவ், தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'வர்மா' படத்தில் அறிமுகமாகிறார் என்பது தெரிந்ததே

வேலூர் சிறையில் கருணாஸை சந்திப்பேன்: விஷால்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.