மணிரத்னம் இயக்கத்தில் மற்றொரு சூப்பர் ஸ்டாரின் மகன்

  • IndiaGlitz, [Tuesday,September 13 2016]

இந்திய திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பாத நடிகர், நடிகைகளே இல்லை என்று கூறலாம். உலக அழகி ஐஸ்வர்யாராய் முதல் பல பிரபலங்களும், பிரபலங்களின் வாரிசுகளும் மணிரத்னம் படத்தில்தான் அறிமுகமாகியுள்ளனர்.
சிவகுமார் மகன் சூர்யா மணிரத்னம் தயாரித்த 'நேருக்கு நேர் படத்திலும், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் 'கடல்' படத்திலும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் 'ஓகே கண்மணி' படத்திலும் அறிமுகமாகியுள்ள நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம்சரண்தேஜா, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கார்த்தி, அதிதிராவ் நடிப்பில் 'காற்று வெளியிடை' படத்தை இயக்கி வரும் மணிரத்னம் இந்த படத்தை முடித்தவுடன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராம்சரண்தேஜா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இந்த படம் ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நன்றியை மாறி மாறி பரிமாறி கொண்ட சிம்பு-கவுதம் மேனன்

கவுதம் மேனன் நடிப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் சிம்புவும், கவுதம் மேனனும்...

சூர்யாவின் திடீர் மாற்றத்திற்கு நயன்தாரா காரணமா?

ரஜினியின் 'கபாலி' இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக ரஞ்சித் அறிவித்தார். சிங்கம் 3' படத்தை அடுத்து சூர்யா...

காவிரி போராட்டக்காரர்களுக்கு பிரகாஷ்ராஜின் வேண்டுகோள்

சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெங்களூர் ...

நயன்தாரா படத்தில் கெளதம்மேனன் வில்லனாக நடிப்பது உண்மையா?

டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

காவிரி பிரச்சனையில் நாம் செய்ய வேண்டியது என்ன? சிம்பு அறிக்கை

காவிரி நீர் பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடக மக்களின் ஒற்றுமைக்கு பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சனையை பயன்படுத்தி ஒருசிலர் வேண்டாத வதந்திகளை பரப்பி வருகின்றனர்.