close
Choose your channels

'சாமானியன்' ரிலீசுக்கு பின்னர் ரூட்டை மாற்றிய ராமராஜன்.. பெரிய நடிகர்கள் சம்மதிப்பார்களா?

Wednesday, May 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடித்த ’சாமானியன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சாமானியன்’ திரைப்படம் வெற்றி பெற்றால் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கும் திட்டத்தை ராமராஜன் வைத்திருந்ததாகவும், ஆனால் எதிர்பார்த்த வெற்றியை ’சாமானியன்’ தரவில்லை என்பதால் அவர் தனது திட்டத்தை மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தன்னை ஹீரோவாக வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியில் நஷ்டம் அடையக் கூடாது என்று முடிவு செய்த அவர், இனிமேல் ஹீரோவாக நடிக்க வேண்டாம் என்று அவர் முடிவு செய்துள்ளதாகவும், பெரிய நடிகர்களின் படங்களில் தனது வயதுக்குரிய கேரக்டர்கள் கிடைத்தால் அதை நடிக்க முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 90களில் பிரபலமாக இருந்த பல நடிகர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கும் நிலையில் ராமராஜன் பெரிய நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான காயை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் ராமராஜன் போன்ற சீனியர் நடிகர்கள் தங்கள் படத்தில் நடிப்பதை பெரிய நடிகர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் ராமராஜன் போன்ற அனுபவமுள்ள நடிகர்கள் குணச்சித்திர வேடங்களில் நடித்தால் நிச்சயம் அவர் இன்னும் ஒரு சுற்று கோலிவுட் திரையுலகில் வருவார் என்று கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment