இந்தியாவின் முதல் குடிமகன் ஆகிறார் ராம்நாத் கோவிந்த்! பதவியேற்பு எப்போது?

  • IndiaGlitz, [Thursday,July 20 2017]

இந்தியாவின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த திங்கள் அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அனைத்து மாநிலங்களின் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் இருந்தே பாஜக ஆதரவு வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடம் பெற்ர மீரா குமார் அவர்களுக்கு 3,67,314 வாக்குகள் கிடைத்தது. மொத்தம் 65.65% வாக்குகள் பெற்ற ராம்நாத் கோவிந்த் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், வரும் 24-ம் தேதி பதவியேற்கவுள்ளார். வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதுவை முதல்வர் நாராயணசாமி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த தேர்தலில் 77 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஜூலி: விடாமல் துரத்தும் ஆர்த்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோவில் ஜூலிக்கு வயிறு வலிப்பது போலவும், அவர் வலியால் துடித்து கொண்டிருக்கும் நிலையில் காயத்ரி இது நடிப்பு என்று கூறுவதுமான காட்சி இடம்பெற்றுள்ளது.

விரைவில் விஷால்-வரலட்சுமி திருமணமா?

கடந்த சில வருடங்களாகவே காதல் ஜோடிகளாக வலம் வந்த விஷால்-வரலட்சுமி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நிர்வாண காட்சி குறித்து நடிகை கல்ராணி விளக்கம்

முன்னணி தமிழ் நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தெலுங்கு மற்றும் கன்னட படவுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர்.

சொல்லித்தான் பாருங்களேன்! கமல் சகோதரர் சாருஹாசன் சவால்

சாதுவாக இருக்கும் நேர்மையாளர்களை சீண்டிவிட்டால் காடு கொள்ளாது என்ற மொழிக்கேற்ப கமல் உண்டு, அவருடைய உயிர்மூச்சான சினிமா உண்டு என்று இருந்தவரை ஒருசில அரசியல்வாதிகள் சீண்டிவிட்டதன் விளைவாக தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமல் கேட்கும் கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் திணறி வரும் நி

அரசியலுக்கு வந்த சிவாஜி நிலை தெரியுமா? கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தமிழக அரசு மீது ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு உச்சகட்டமாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த புகார்களை அனுப்பி வையுங்கள் என்று தனது ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு புகார்கள் அனுப்ப வேண்டிய லிங்க்கையும்