close
Choose your channels

'கடலோராம் வாங்கிய காத்து'... ரம்யா பாண்டியனின் வெட்கத்துடன் கூடிய பீச் வீடியோ..!

Friday, April 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் சற்றுமுன் பீச் ஓரத்தில் காற்று வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி அவர் சமீபத்தில் ரிஷிகேஷ் சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அவை வைரல் ஆகியது என்பதையும் பார்த்தோம்.

குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாவில் ஃபாலோயர்கள் குவிந்தனர். அவருக்கு தற்போது கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் பீச் ஓரத்தில் சேலை காஸ்டியூம் அணிந்து வெட்கத்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக், கமெண்ட்களை குவித்து வருகின்றனர். சித் ஸ்ரீராம் மற்றும் சங்கீதா கருப்பையா பாடிய ’குளிராத புள்ள’ என்ற பாடலின் பின்னணியில் இருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ’நண்பகல் நேரத்தில் மயக்கம்’ என்ற மலையாள படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன், தற்போது ’இடும்பன்காரி’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.