பாவாடை தாவணியில் வெட்க சிரிப்புடன் ரம்யா பாண்டியன்: சகோதரர் பரசுபாண்டியன் கேட்ட செம கேள்வி

  • IndiaGlitz, [Saturday,August 20 2022]

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் பாவாடை தாவணியில் வெட்கச் சிரிப்புடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

ரம்யா பாண்டியன் பதிவு செய்யும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் அவ்வப்போது அவருடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது அவர் பாவாடை தாவணி காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அவருடைய வெட்கச் சிரிப்புடன் கூடிய இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் தனுஷ், சமந்தா நடித்த ’தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை பதிவு செய்துள்ளார். அந்த வரிகள் பின்வருமாறு:

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!

இந்த பதிவிற்கு ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் கமெண்ட்டில் ‘யாரு அந்த பையன்? என்று கேள்வி கேட்க அதற்கு ரம்யா பாண்டியன் ’பாடல் வரிகளை ரசிக்க வேண்டும், ஆராயக்கூடாது’ என்று பதிலளித்துள்ளார்.

More News

ரசிகர்களுக்கு அஜித் கூறிய முக்கிய தகவல்: மேனேஜர் சுரேஷ் சந்திரா டுவிட்!

 நடிகர் அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் அவர் தனது ரசிகர்களுக்கும் அறிவுரை கூற வேண்டும் என்றாலோ அல்லது பொது மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட தமிழ் சீரியல் நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆணும் பெண்ணும் இணைவது தான் திருமணம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக ஆண்களும் சரி பெண்களும் சரி தன்னைத் தானே திருமணம்

பிக்பாஸ் ரேஷ்மாவா இது? பீச்சில் செம கிளாமர் நடனம்: வைரல் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் நடிகைய்மான ரேஷ்மா, பீச்சில் செம கிளாமர் உடையில் செம டான்ஸ் ஆடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகை த்ரிஷா? எந்த கட்சியில் தெரியுமா?

நடிகை த்ரிஷா அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் சினிமாவிற்கே வந்திருக்கமுடியாது  இயக்குனர் பா.இரஞ்சித்.

இயக்குனர் பா.இரஞ்சித்  சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு "நட்சத்திரம் நகர்கிறது" எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன்,  மற்றும்  மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை  .